சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் வங்கிக் கணக்குகளை சோதனையிட நீதிமன்று உத்தரவு.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லும் வர்த்தகத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்களின் வங்கிக்கணக்கணக்குகளை, சோதனையிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத குடியகல்வு மோசடியுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்களின் வங்கிக்கணக்குகளை சோதனையிட்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், ஊழல் தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டது.
112 தமிழர்களை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்ல முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில், 7 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச்செல்ல தயாராகவிருந்த 112 பேரிடமிருந்து 320 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதி, அறவிடப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்காக, 7 சந்தேக நபர்களினதும் வங்கிக்கணக்குகளை சோதனையிடுவது, அவசியமென, பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி, சந்தேக நபர்களின் வங்கிக்கணக்கு அறிக்கைகளை, பொலிஸாருக்கு வழங்குமாறு, உரிய வங்கிகளின் முகாமையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment