வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கை அரசாங்கம் நாடு கடத்தக்கூடாதாம்
இலங்கையிலுள்ள வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கை அரசாங்கம் நாடு கடத்தக் கூடாது என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையில் தங்கியுள்ளனர்.
இவர்கள் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிலையத்தில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளார்கள்.
அத்துடன், இவ்வாறு தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளை நாடு கடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாவும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரஜைகளை நாடு கடத்தக் கூடாது எனவும் அவ்வாறு நாடு கடத்தினால் எதிர்ப்புக்கள் வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment