அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோருவேரின் விண்ணப்பங்களை அவுஸ்திரேலியாவுக்கு வெளியே உள்ள தடுப்பு முகாம்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை அந்த நாட்டின் செனட் சபை நிராகரித்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் அரசியல் புகலிடம் தொடர்பான சட்டத்தில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பீ.பி.சி தெரிவித்துள்ளது.
அண்மையில் கிறிஸ்மஸ் தீவுக்கு அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகொன்று விபத்துக்குள்ளானமை தொடர்பாகவும், இந்த விவாதத்தின் போது நினைவு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தப் பிரேரணை அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தின் கீழ்சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது குறைந்தளவான வாக்குவீதத்தால் அது நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உத்தேச புதிய சட்டத்தின் ஊடாக புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட மாட்டாது என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். பிரேரணை தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அறிக்கையொன்றை விடுத்துள்ள அவுஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட், அரசியல் புகலிடம் வழங்கும் கொள்கைகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment