செல்லிடத் தொலைபேசிகளிலுள்ள 'மைடா' தொற்றுக்கிருமியால் உடலுக்கு பாதிப்பில்லையாம்
செல்லிடத் தொலைபேசிகளில் 'மைடா' எனப்படும் தொற்றுக் கிருமிகள் இருப்பதாக வெளியான வதந்திகள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
செல்லிடத் தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு இந்த தொற்றுக்கிருமி உடலுக்குள் செல்வதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகிருந்தன.
எனினும்,இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அறிக்கைகள் சாதகமான முறையில் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயினும்,எந்தவொரு அசுத்தமான சூழலிலும் மைடா தொற்றுக்கிருமிகள் இருக்கும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் நோயெதிர்ப்பு மருத்துவம் தொடர்பான பேராசியர் நிலந்தி டி சில்வா வெளியிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment