ஆயுளைக் குறைக்காதீர் – கிழக்கு மாகாண வாக்காளர்
தற்போதைய கிழக்கு மாகாண சபைக்கு 2013 மே மாதம் வரைக்கும் ஆயுள் இருப்பதால் அதற்கு முன்பு அதைக் கலைக்கூடாது எனவும், அப்படி செய்வது அதன் சொந்த தீர்மானங்களையே மீறுவதாக அமையும், என தெரிவித்து வாக்காளர் ஒருவர் மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாகாண சபையை கலைப்பதற்கு ஆளுநருக்கு பரிந்துரை செய்த அல்லது விரைவில் பரிந்துரை செய்ய விருக்கும் தீர்மானமானது முதலமைச்சரால் ஆதரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஏற்கனவே, வட மத்திய மாகாண சபையை அதன் ஆயுள் முடியு முன்பு கலைக்கக் கூடாது என்று அதன் எதிர்க்கட்சித் தலைவர் செய்த முறைப்பாடு மேன் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment