Friday, June 22, 2012

நாடுகடத்தப்பட்டோர் துன்புறுத்தப்படவில்லை - பிரித்தானிய உயர்ஸ்தானிகம்

ஐக்கிய ராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர் களுக்கு எதிராக இலங்கையில் துன்புறுத்தல்களும், அச்சுறுத்தல்களும் இடம்பெற்றுவருவதாக, ஐக்கிய ராச்சியத்தை மையமாக கொண்டு இயங்கும் உலகளாவிய தமிழ் அமைப்பு (GTF) மற்றும் பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் குற்றம் சுமத்தி வந்தன. ஆனால் 2009இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலம் முதல் இது தொடர்பாக எந்தவிதக் குற்றச்சாட்டுக்களும் பதிவாகவில்லை என பிரிட்டன் உயர்ஸ்தானிகம் தெரிவித்துள்ளது.

2009 ஜனவரி முதல் 2012 மார்ச் வரை மொத்தமாக 970 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களுள் சுயவிருப்பத்தின் பேரிலும் பலவந்தமாகவும் அனுபப்பட்டவர்கள் உள்ளடங்குகின்றனர் என தெரிவித்த அவர் இராணுவத்தினருக்கோ அல்லது பொலிஸாருக்கு எதிராக பிரிட்டனில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டவில்லை என உயர்ஸ்தாணிக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

2009இல் 207 பேரும், 2010 இல் 242 பேரும், 2011இல் 413பேரும் மற்றும் 2012 முதற் காலாண்டுப் பகுதியில் 108 பேரும் திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் அழுத்தம் காரணமாக சில மனித உரிமை அமைப்புக்கள் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com