தூதரகத்தில் இருந்து வெளிவரும் போது ஜூலியன் அசன்ஜே கைது செய்யப்படுவார் -மெட்ரோ பொலிஸ்
இலண்டனில் உள்ள ஈகுவடோர் தூதரகத்தில் இருந்து வெளிவரும் போது விக்கிலீக்சின் தாபகர் ஜூலியன் அசன்ஜே கைது செய்யப்படுவார் என்று மெட்ரோபொலிட்டன் பொலிஸ் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
சுவீடன் அதிகாரிகள் கற்பழிப்பு மற்றும் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்ய வேண்டியிருந்த்தால், அவர் 2010 ல் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டார். பின்பு இலண்டனிலுள்ள அவரது ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் ஒவ்வொரு இரவும் அவர் இருக்க வேண்டும் என்ற நிபந்தணையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இப்போது நிபந்தனையை மீறியிருப்பதா,ல் அவர் கைது செய்யப்பட வேண்டியவர் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது. ஆனால் வெளிநாட்டுத் துதரகங்களுக்குள் நுழையக்கூடாது என்ற இஜைதந்திர நிகழ்ச்சி முறைமை (Protocol) இருப்பதால் பிரித்தானியா அவரைக் கைது செய்வது நிச்சயமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
24 மணி நேரத்துக்குள் ஈகுவடோர் ஜனாதிபதியின் இறுதித் தீர்மானம் வந்து விடும் என்றும் அதன் பின்னரே அசன்ஜேக்கு அடைக்கலம் வழங்குதல் தொடர்பாகன முடிவு தெரியும் என்று ஈகுவடோர் இராஜதந்திரி ஒருவர் கூறினார்.
0 comments :
Post a Comment