சர்வதேச நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவார்களுக்கு புத்துயிரூட்டும் செயற்பாடுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் செயற்பட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்விருந்த உரை ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்டமை குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் செயற்பட்ட விதம் குறித்த கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற தலைமை ஆசனத்திற்கு மதிப்பளிக்காது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும், அவர் தாய் நாட்டிற்கு துரோகமிழைப்பதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்டமைக்கான பொறுப்பை பிரித்தானிய அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும், தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment