Sunday, June 17, 2012

வல்வெட்டித்துறையில் பெண் கொலை

யாழ்ப்பாணம் ,வல்வெட்டித்துறை பகுதி யிலுள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித் துறையை சேர்ந்த 85 வயதான குறித்த வயோதிபப் பெண் அவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் (15) உடலமாக மீட்கப்பட்டார். உடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெண் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் பருத்தித்துறை நீதவானால் நீதவான் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment