Saturday, June 30, 2012

சிவ்சங்கர் மேனன்- ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திதுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், இந்திய- இலங்கை உறவுகள் குறித்தும் அவர் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பிரச்சினைக்கு இலங்கையாலேயே ஒரு தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தாலும், இந்த விஷயத்தில் தான் தொடர்ந்து அனைத்து தரப்புகளுடனும் பேசி வருவதாகவும், ஒரு உடன்பாட்டுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும், இந்தியாவின் இலங்கைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், ஒரு முறையான மாற்று ஏற்பாட்டை எட்டும் வரை 2008ல் இரு தரப்புகளும் ஒப்புக்கொண்ட யதார்த்த ரீதியிலான ஏற்பாடுகள் தொடரப்படவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com