Wednesday, June 13, 2012

யாழ் குடாநாட்டில் குற்றங்களைத் தடுப்பதில் வல்லவர்கள் படையினரா ? பொலிஸாரா ?

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 60% இராணுவத்தைக் குறைத்ததனால் அங்கு குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், படையினர் குடியியல் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை என வடக்கு மக்கள் நன்கறிவார்கள் என்றும், படையினர் தமக்கு ஆற்றிய சேவைக்கு மக்கள் நன்றி பாராட்டு கிறார்கள் என தெரிவித்த அவர், உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் உடைமைகள் படிப்படியாக அவர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது கடமையான நாட்டின் எந்தப் பகுதியிலும் குற்றங்களுக்கு எதிராகச் செயல்படுவதையும், குற்றங்களைத் தடுப்பதையும் தாம் கைவிட்டு விடவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளதுடன், படையினர் செய்த அளப்பரிய சேவையை மறந்து விட முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment