கடலில் மூழ்கியது இலங்கை படகா? இந்தோனேசியா படகா?:
ஆஸ்திரேலியாவின் தகவலால் பெரும் குழப்பம்!
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகே 200 பேருடன் கடலில் மூழ்கிய கப்பல் இலங்கையில் இருந்து புறப்பட்டு வந்ததா? இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்டு வந்ததா? என்ற குழப்பத்தை ஆஸ்திரேலியாவும் இந்தோனேஷியாவும் ஏற்படுத்தி இருக்கின்றன. கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய படகில் இருந்து முதலில் 110 பேர் வரை உயிரோடு மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது 90 பேர் என்று கூறியுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்று தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தோனேஷியாவின் மீட்பு அணியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷோ பேட்டி ஒன்றில் கூறுகையில், ஆஸ்திரேலிய நாட்டு கடற்படையிடமிருந்து நேற்று பிற்பகல் 11.45 மணிக்கு வந்த பேக்ஸ் வந்தது என்றும் இலங்கை அகதிகளை ஏற்றி வந்த படகு இந்தோனேஷியாவில் இருந்து 129 கடல் மைல் தொலைவிலும் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து 126 கடல்மைல் தொலைவில் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் ஜசான் கிளாரே கூறுகையில் இந்தோனேசியாவில் இருந்து 38 கடல்மைல். தொலைவில் அகதிகளின் படகு நிற்பதாக ஆஸ்திரேலியா தகவல் அனுப்பியது என்று கூறியிருந்தார்.
ஆக இந்தோனேஷியா மற்றும் இலங்கையில் இருந்து 2 படகுகள் புறப்பட்டு கிறிஸ்துமஸ் தீவுக்கு சென்றது உறுதியாகி உள்ளது. இந்த இரண்டு படகில் கடலில் மூழ்கியது எது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இருப்பினும் ஆஸ்திரேலியாவோ, கடலில் மூழ்கியது இந்தோனேஷிய படகுதான் என்றும் அதில் இலங்கையைச் சேர்ந்த எவரும் இல்லை என்றும் கூறியிருக்கிறது.
0 comments :
Post a Comment