Saturday, June 30, 2012

ஹிட்லரின் மரணத்தில் இருந்த மர்மம்!

ஒருவர் நம்மை ஏமாற்றினால் நமக்கு எவ்வளவு கோபம் வந்துவிடுகிறது. அவரே பல ஆண்டுகள் ஏமாற்றினால் எப்படி இருக்கும்? ஆம்! வரலாற்றில் ஒருவன் 66 ஆண்டு காலமாக நம்மை ஏமாற்றியிருக்கின்றான். நம்மை என்றால் ஒட்டுமொத்த உலகையே 66 ஆண்டுகளாக ஏமாற்றியிருக்கிறான். தான் 'உயிருடன் இல்லை' என்று உலகையே நம்ப வைத்து ஏமாற்றியி ருக்கிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் உயிருடனும் வாழ்ந்திருக் கிறான். அவன் ஒரு சாதாரண மனிதன் என்றால், நாம் அவனைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஆனால் 20 ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் கொடூரமானவன் எனக் கணிக்கப்பட்டவன் அவன். உலகத் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரின் மரணங்கள் இந்த வரலாற்று மர்மத்தின் பக்கங்களாக நிரப்பப்பட்டு இருக்கின்றது. சிலரின் மரணங்களில் மர்மங்கள் இருந்தன. சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லர் ஆகியோர் உண்மையில் இறந்தார்களா என்பதே மர்மங்களாக இருப்பதாக வரலாறு பதிந்து கொண்டது. அந்த நபர் யாரென்று உங்களுக்குத் தெரியாத பட்சத்தில் நானே சொல்கிறேன். உலக வரலாற்றில் தன் பெயரை அழிக்க முடியாத கறையுடன், ஆழமாக 'அடால்ஃப் ஹிட்லர்' (Adolf Hitler) என்று எழுதியவன்.

1945 இல் உலக வரலாற்றையே தலை கீழாகத் திருப்பிப் போட்டவன் இந்த அடாலஃப் ஹிட்லர் (Adolf Hitler) இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஹிட்லரும், அவனது மனை வியான ஏஃபா பிரெளனும் தற்கொலை செய்து இறந்தது மட்டுமல்லாமல், அவர்கள் உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக் கூடாது என்பதால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட் டார்கள் என்பதுதான் நாம் இதுவரை நம்பிக்கொண்டிருக்கும் வரலாறு.

ஹிட்லரின் இறப்பு இப்படித்தான் நடந்தது என்று ஒரு வடிவம் நம்மால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கையில், ஹிட்லர் இறக்கவில்லை, அவன் தன் மனைவியுடன் தப்பிச் சென்று விட்டான் என்னும்செய்தி 66 வரு டங்களுக்குப் பின்னர் கிடைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த உலகையும் தனி நப ராக ஏமாற்றிவிட்டு, தனக்குள்ளே சிரி த்துக் கொண்டு மனைவி ஏஃபாவுடன் எங்கோ மறைந்திருக்கிறான் ஹிட்லர்.

"என்ன ஹிட்லர் சாகவில்லையா' என வாய் பிளந்தபடி கேள்வி கேட் பதை உங்களால் தவிர்க்கவே முடி யாது. அவன் உயிருடன் இருந்தான் என்பது தாங்க முடியாத ஒரு உணர்வையே நமக்குக் கொடுக்கும். நீங்கள் இதை மறுக்கும் பட்சத்தில், இதை ஏன் நம்ப வேண்டும் என்பதற்குரிய தெளிவான விளக்கத்தை நான் கொடுக்க வேண்டும். எனவே நாம் 30.04.1945 அன்று ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் (Berlin) நகருக்குச் செல்வோமா...

ஹிட்லரின் மரணம் என்னும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இதுதான் நடந்தது என்று உலகமே நம்பும் விடயங்களை முதலில் பார்ப்போம்.

இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் ஜெர்மனியின் ஆக்ரோசமான சக்தியைத் தனித்தனியாக எதிர்கொள்ள முடியாத நாடுகள், 'நேச நாடுகள்' என்னும் பெயரில் ஒன்று சேர்ந்து ஜெர்மனியைத் தாக்கின.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்பன ஒரு பக்கத்தில் அணி சேர்ந்து தாக்க மறுபக்கத்தில் சோவியத் ரஷ்யா தாக்கத் தொடங்கியது. இந்த நான்கு நாடுகளின் ஒன்று சேர்ந்த தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 30.04.1945 இல் ஜெர்மனி தனது தோல்வியைத் தழுவிக் கொண்டது. இறுதிக் கட்டப் போரின் போது ஹிட்லர் பெர்லின் நகரில் அமைந்த அரசுத் தலைவரின் கட்டடத் துக்கு கீழே இருந்த ஒரு நிலக்கீழ் சுரங்கத்திலேயே இருந்தார். எதிரி நாடுகளின் குறிப்பாக ரஷ்யாவின் விமான குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்ள அங்கேயே பதுங்கியி ருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதுவே அவனின் இறப்புக்கான கடைசி இடமாகவும் மாறியது என்றும் சொல்லப்பட்டது.

ஹிட்லரின் இறுதி நாளில் என்ன செய்தான், எப்படி இறந்தான் என்பதை உலகிற்கே வெளிக்கொண்டு வந்தவர், 95 வயதாகியும் இன்றும் உயிருடன் இருக்கும் ஹிட்லரின் மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த 'ரோஹுஸ் மிஷ்' (Rochus Misch) என்பவர்தான். இந்த ரோஹுஸ் மிஷ் பிறந்தது 29.07.1917 ஆம் ஆண்டு. தனது 28 வது வயதில் அவர் ஹிட் லருடன் கடைசியாக இருந்திருக்கிறார். அவர் ஹிட்லரின் இறுதி நாள் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.....!

"ஏப்ரல் 30" திகதி பங்கரில் உள்ள அனைவரையும் ஹிட்லர் அழைத்து எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம். தேவையானவர்கள் மட்டும் இங்கு இருந்து கொள்ளட்டும். இப்படி அவர் சொன்னதால் அங்கு இருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவனா னேன். ஹிட்லரும், ஏஃபாவும் தற் கொலை செய்வது என்னும் முடிவும் அப்போது எடுக்கப்பட்டது. புரொபசர் ஹாஸெ (ளிr. தீலீrnலீr சிassலீ) ஹிட்லரிடம் சொன்னார்.

'முதலில் சயனைட் மாத்திரைகளை விழுங்கி விட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது நல்லதும்' இதைக் கேட்ட பின்னர் ஹிட்லரும், ஏஃபாவும் தங்கள் அறையை நோக்கிச் சென்று கதவைச் சாத்திக் கொண்டார்கள். நெடு நேரம் எந்த அசைவுகளும் இல்லை. அப்புறம் ஹிட்லரின் அறையைத் திறப்பது என்ற முடிவுக்கு வந்தோம்.

திறந்த போது நான் மெல்ல எட்டிப் பார்த்தேன். நான் கண்ட காட்சி, ஹிட்லர் பெரிய சோபாவில் இரத்தக் கறையுடன் இறந்து கிடக்க, அருகில் இருந்த சிறிய சோபாவில் ஏஃபா பிரெளன் தலை சாய்ந்து விழுந்து கிடந்தார். பின்னர் சிலர் அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்று பங்கருக்கு வெளியே இருந்த இடத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள்".

ஹிட்லரின் இறப்பைப் பற்றி முழுமையானதொரு அறிக்கையக் கொடுத்த ஒரே நபரும், ஹிட்லருடன் இருந்து தப்பி ஒரே நபருமாக இருந்தவர் இந்த ரோஹுஸ் மிஷ்தான். ஹிட்லர் இறப்பதற்கு இரண்டு நாட்களின் முன்னர்தான் ஹிட்லரின் நண்பரும், இத்தாலியின் தலைவருமான முஸோலினியும் (Dr. Werner Hasse) அவரது மனைவியும் கொல்லப்பட்டு, ஒரு பெட்ரோல் நிலையத்தில் அவர் களது உடல்கள் தலை கீழாகத் தொங்க விடப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டிருந்ததை ஹிட்லர் அறிந்திருந்தார். அதனால்தான் எதிரிகளிடம் தனதும், ஏஃபாவுடையதும் உடல்கள் அகப்படக் கூடாது என்று ஹிட்லர் முடிவு செய்து, அதனால் எரிக்கப்பட்டது என்றும் ஒரு கதை சொல்லப்பட்டது.

மே 1 ஆம் திகதி ஜெர்மனிய வானொலி, 'ஹிட்லர் இறந்துவிட்டார்' என்ற செய்தியை அறிவித்தது. அதற்கு அடுத்த தினம் அதாவது 02.05.1945 இல் ஹிட்லர் இருந்ததாகச் சொன்ன பங்கரை ரஷ்யா கைப்பற்றியது.

அத் தோடு ஹிட்லர் சம்பந்தமாகத் தங்க ளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை என்று அறிக்கையும் கொடு த்தது. ஆனால் சில மணி நேரங்களில் அவர்களுக்கு ஹிட்லரின் முழுமையான உடல் கிடைத்ததாகச் சொல்லி, அந்த உடலுடன் நின்று படங்களை எடுத்து ரஷ்யா வெளியிட்டது.

ஆனால் அடுத்த நாட்களிலேயே அது ஹிட்லரின் உடலல்ல என்றும், ஹிட்லர் தனக்னெ வைத்திருந்த 'டூப்' என்றும் அறிவித்தது ரஷ்யா. அந்த ஹிட்லரின் டூப்பாக இருந்த நபர், எதிரிகளின் இராணுவத்தை, ஹிட்லர் இறந்துவிட்டார் என்று நம்ப வைப்பதற்காக ஹிட்லரின், பாதுகாப்புப் படையினராலேயே கொல்லப்பட்டு அங்கு போடப்பட்டிருந்தார்.

ஹிட்லர் தனக்கென ஒரு டூப்பை எதற்காக வைத்திருந்தார் என்பதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஹிட்லரைக் கொல்வதற்கு ஜெர்மனியிலேயே சிலரால் ஒரு சதித்திட்டம் தீட்டப்பட் டது. அந்த சதித்திட்டத்தில் ஜுலை மாதம் 1944 இல் ஹிட்லர் சாலையில் ஊர்வலமாக வரும்போது கொல்லப்பட வேண்டும் என முடிவாகியது. அதற்கு 'ஒபெரேசன் வால்கிரீ' என்று பெயரும் இடப்பட்டிருந்தது.

ஆனால் அது படுதோல்வியில் முடிவடைந்தது. அந்தச் சதியில் ஈடுபட்டார்கள் என்று 300க்கும் அதிகமானவர்கள் சரமாரியாகக் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து ஹிட்லர் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தனக்கென ஒரு டூப்பை அனுப்பி வைப்பார். அப்படி மொத் தமாக ஹிட்லருக்கு ஆறு டூப்புகள் இருந்ததாகச் சொல்வார்கள். அதில் ஒருவன்தான் இறந்து காணப்பட்டான்.

இதன் பின்னர் ஹிட்லரும் ஏஃபாவும் தற்கொலை செய்து அவர்கள் இருவரது உடல்களும் எரிந்த நிலையில் கண்டெ டுக்கப்பட்டது என்று ரஷ்யாவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. உலகமும் அதை ஏற்று நிம்மதி பெருமூச்சு விட்டது. ஹிட்லரின் உடல் கிடைத்ததோ இல்லையோ, அவன் இறந்தது என்று செய்தியே நமக்குப் போதும் என்று மகிழ்ச்சியுடன் இருந்தது.

ரஷ்யா விட்ட அறிக்கைகள் இத்துடன் முடிந்துவிடவில்லை.

இறுதியாக 1993 இல் ஹிட்லரின் இறப்புடன் சம்பந்தமான கடைசி அறிக்கையையும் ரஷ்யா வெளியிட்டது.

அந்த அறிக்கை இதுதான். 'ஹிட்லர் இறந்தபோது, எந்த சோபாவில் இருந்து கொண்டு தன்னைச் சுட்டுத் தற்கொலை செய்தாரோ, அந்த இரத்தம் தோய்ந்த சோபாவையும் ஹிட்லர் இறந்ததாகச் சொல்லப்பட்ட இடத்தில் எரிந்த நிலையில் துப்பாக்கிக் குண்டு ஒன்று துளைத்த அடையாளத் துடன் கூடிய அவரின் மண்டையோட் டையும் மட்டும் எடுத்துப் பாதுகாத்து வைத்திருக்கிறோம்' என்று இருந்தது.

ஹிட்லரின் மரணம் சம்பந்தமாக உலகமே நம்பியிருக்கும் சம்பவங்கள் இவைதான். இவையெல்லாவற்றிலும் இறுதியாக எஞ்சும் முடிவுகள் என்னவோ ஹிட்லரும் ஏஃபாவும் இறந்து விட்டார்கள் என்பதுதான். ஆனால் இவையெல்லாமே பொய் யென்று நிரூபணமாகி, ஹிட்லரும் ஏஃபாவும் உயிருடன் தப்பினார்கள் என்னும் செய்தி இப்போது நம்மை அதிர வைக்கிறது.

ஹிட்லர் இறந்து விட்டான் என்று உலகமே சொல்லிக் கொண்டிருக்க ஒருவர் மட்டும் திட்டவட்டமாக ஹிட்லர் தப்பிவிட்டான் என்று ஜுலை 1945லேயே சொன்னார். சொன்னவர் சாதாரணமானவர் என்றால் யாரும் அதைக் கவனத்தில் எடுத்திருக்கத் தேவையில்லை. ஆனால் அப்படிச் சென்னவர் மிகப் பெரியவர். அவர் வேறு யாருமல்லை. அந்தக் காலத்தில் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவரும், சோவியத் ரஷ்யாவின் அதிபருமான ஜோசப் ஸ்டாலினேதான்.

அதுவும் முக்கிய தலைவர்களான ட்ரூமன், சர்ச்சில் ஆகியோரைச் சந்தித்த ஒரு விழாவில் பகிரங்கமாக "ஹிட்லர் சாகவில்லை. ஸ்பெயினுக்கோ, அர்ஜென்டீனாவுக்கோ நீர்மூழ்கிக் கப்பலில் தப்பிவிட்டார்" என்று கூறினார். அது மட்டுமில்லாமல், ஹிட்லரின் இறப்பு சம்பந்தமாக ரஷ்யா தயாரித்த கோப்பை 'ஒபெரேசன் மித்' என்று பெயரிட்டு அதை ஆராயும்படி கட்டளையும் இட்டிருந்தார் ஸ்டாலின். ஹிட்லர் இறக்கவில்லை என்னும் சந்தேகத் துளி இங்கிருந்துதான் முதலில் தூவப்பட்டது.

உலகிலேயே மிகவும் பலமான உளவுப்படை என்று அழைக்கப்படுவது ரஷ்யாவின் உளவுப்படையான றிமிகி (Konmitet Gesudarstvennoy Bezopasnosti).அப்படி ஒரு படையையே வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின், ஹிட்லர் இறந்ததற்கான சாட்சியங்களை எல்லாம் தன்னுடனே வைத்திருக்கும் போது, எதற்கு ஹிட்லர் தப்பிவிட்டார் என்று சொல்ல வேண்டும்? ஹிட்லர் சார்ந்த கோப்பிற்கு ஏன் ணிyth என்று பெயர் வைக்க வேண்டும்? ஹிட்லர் நீர்மூழ்கிக் கப்பலில்தான் தப்பினார் என்று எப்படி அவர் அடித்துச் சொன்னார்? ஸ்டாலின் அப்போதே எதையோ அறிந்திருக்க வேண்டும். அதற்கான சாட்சியங்களை இல்லாததால் அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருந்திருக்க வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக நடந்த பல சம்பவங்கள் ஹிட்லர் ஆர்ஜென்டீனாவுக்கு நீர் மூழ்கிக் கப்பலின் மூலம் தப்பிவிட்டார் என்பதைப் பலமாக உறுதி செய்தன. இறுதியில் அமெரிக்காவின் பிகியி ஹிட்லர் தப்பியது உண்மைதான் என்பதை உறுதி செய்தது. அதை அடிப்படையாக வைத்து, ஆதாரங்களுடன் 700 பக்க அறிக்கையை பிகியி வெளியிட்டது. நடந்தது இதுதான் (என்று சொல்லப்படுகிறது).

30.04.1945 அன்று ஹிட்லரும் ஏஃபாவும் இறந்தது போல இரண்டு பிணங்கள் தயார் செய்யப்பட்டுக் கொளுத்தப்பட்டன. ஆனால் ஹிட்லரும், மனைவியும் அவர்கள் மறைந்திருந்த பங்கரின் இன்னுமொரு இரகசிய வழியாக வெளியே வந்து அப்படியே நோர்வே நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

நோர்வேயில் ஹிட்லருக்காகவே காத்திருந்த நீர்மூழ்கிக் கப்பலில் அர்ஜென்டீனா நோக்கிப் பிரயாணம் செய்திருக்கிறார்கள். 2ம் உலகப் போரின் இறுதிக் கட்டங்களில் ஹிட்லரின் படையில் இருந்த, மிக முக்கியமான, போர்க் கைதிகள் என வர்ணிக்கப்படும், பல நாஸித் (NAZI) தலைவர்கள் ஏற்கனவே ஆர்ஜென்டீனாவுக்குச் சென்றிருந்தார்கள்.

அவர்களில் மிக மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள், ஜோசப் மெங்கெலே (Josef Mengele) அடோல்ஃப் ஜக்மான்(Adolf Eichmann),, பிரான்ஸ் ஸ்டாங்கிள் (Franz Stangl) எரிக் பிரீப்கே (Erich Priebke) க்ளெளஸ் பார்பீ(Klaus Barbie) என்பவர்களாவார்கள். இவர்கள் எல்லாரும் நாஸிப் படையில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள். அர்ஜென்டீனாவில் 30000க்கும் அதிகமான நாஸிப் படையினர் தப்பியோடி வாழ்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜுலை 10ம் திகதி 1945 இல் அர்ஜென்டீனாவை ஸி530 என்னும் நீர்மூழ்கிக் கப்பல் அடைந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜெர்மனிக்குச் சொந்தமானது. அது பற்றிய விபரங்களை அமெரிக்கா கேட்ட போது, அதில் வெறும் கப்பல் மாலுமிகள் மட்டுமே இருந்தார்கள் எனக் கூறி, அவர்களை அமெரிக்கா விசாரிக்க அர்ஜெட்டீனா ஒத்துழைத்தது. அதில் யார் யார் வந்தார்கள் என்ற விபரமே இல்லை. வெறும் மாலுமிகள் மட்டும்தான். அதற்கு ஐந்து வாரங்களுக்குப் பின்னர் ஸி977 என்னும் ஜெர்மனிக்குச் சொந்தமான இன்னுமொரு நீர் மூழ்கிக் கப்பல் தெற்கு அர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. இதற்கும்அதே கதைதான் அமெரிக்காவுக்குச் சொல்லப்பட்டது.

ஆனால் ஹிட்லர் இறந்தார் என்று ஜெர்மனி அறிவித்த அன்றுவரை அதாவது மே மாதம் 2ம் திகதி வரை நோர்வே துறைமுகத்தில்தான்ஸி977 என்ற நீர் மூழ்கிக் கப்பல் நின்று கொண்டிருந்தது. ஆனால் மே 2ம் திகதி திடீரென நோர்வே துறைமுகத்தில் இருந்து மாயமாக மறைந்தது அந்த நீர்மூழ்கிக் கப்பல் அதற்கு அப்புறம் பல நாட்களாக அது காணப்படவே இல்லை. ஆனால் ஜெர்மனி தோற்றிருந்த வேளையில் அனைவரும் சரணடைந்து கொண்டிருந்த நேரமது.

மொத்தமாக 102 நாட்கள் கடலினடியிலேயே பிரயாணம் செய்த ஸி977 பின்னர் அர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. அதில் யார் வந்தார்கள்? சரணடையும் சாத்தியம் இருந்தும், இவ்வளவு ஆபத்தான நீண்ட நாள் கடலடிப் பிரயாணத்தை அது ஏன் மேற்கொண்டது என்ற கேள்விகளுக்கு ஆர்ஜென்டீனா எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. பல தலைவர்களுடனும், அளவுக்கு மிஞ்சிய பணத்துடனும், சொத்துக்களுடனும் அர்ஜெடீனாவை வந்தடைந்தான் ஹிட்லர் என்று சொல்கிறார்கள்.

அதன் பின்னர் அர்ஜென்டீனாவின் பல இடங்களிலிருந்து இரகசியமா, மிகவும் நம்பகத்தன்மை உடையவர்களிடமிருந்து, ஹிட்லரைக் கண்டதாகச் செய்திகள்பிகியிஐ வசம் வந்தடைந்தது. ஹிட்லருக்கு இரண்டு பெண்கள் பிறந்ததாகவும், அவர்கள் அங்கேயே வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன. அந்த பெண்களைச் சந்தித்த பலர் சாட்சிகளாகவும் இருந்திருக்கின்றனர். ஏஃபா ஜெர்மனியில் இருந்து தப்பும்போதே கர்ப்பமாக இருந்ததாகவும் சொல்கின்றனர்.

'கிரே வோல்ஃவ்' (Gray Wolf) என்னும் புத்தகத்தை எழுதிய இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையாளர் ஜெரார்ட் வில்லியம்ஸ் (Gerrard Williams) Sky News க்குக் கொடுத்த பேட்டியின்படி நாம் தற்போது ஹிட்லர் இறந்ததாக நம்பும் ஆண்டுக்கு 17 ஆண்டுகள் கழித்து 1962 இல் ஆர்ஜென்டீனாவில் ஹிட்லர் இறந்தான் என்று தெரிய வருகிறது. அதாவது வயது போன நிலையில் இயற்கையாக இறந்தான் ஹிட்லர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com