Friday, June 1, 2012

பிரித்தானியாவில் கொலைக்கு குறுந்தீர்ப்பு

ஐக்கிய இராஜ்ஜியத்தில் லிவர்ப்பூலில், ஐடன் என்ற இடத்தில் கடை உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தை 30 வயது மகேஷ் விக்கிரமசிங்க, கடையில் திருட வந்த 19 வயது ஹரிசனின் கத்திக்குத்துக்கு இலக்கானார். கடந்த நவம்பர் 29 ல் நடைபெற்ற இக் கொடூர சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்கள் மூலம் கொலையென்று திட்டவட்டமாகக் காட்டினாலும், வழக்கை விசாரித்த லிவர்ப்பூல் முடிக்குரிய நீதிமன்றம் இதனை தற்செயலாக இடம் பெற்ற ஆட்கொலை என்று கூறி, குற்றம் சாட்டப்பட்டிருந்த பதின்ம வயதினனான ஹரிசனுக்கு 10 ஆண்டு கால சிறைத் தண்டணை விதித்துள்ளது. இதனால், அவர் நாலைந்து ஆண்டுகளில் வெளியில் வந்து விடலாம்.

இத் தீர்ப்பினைக் கேட்டு மகேசின் உறவினரும் நீதியை விரும்புவோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

1 comment:

  1. King do no wrong,this is the tradition of English

    ReplyDelete