சிறைக் கைதிகளிடம் எச் ஐ வி பரிசோதனை
நாட்டில் உள்ள சகல சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளிடம் எச் ஐ வி எயிட்ஸ் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான பணிப்புரையை சுகாதார அமைச்சர், தொற்று நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவிற்கு விடுத்துள்ளார்.
கடந்த தினத்தில் வெளிக்கடை சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு எச். ஐ . வி. தொற்றியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேன, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் இவ்வாறு எயிட்ஸ் தொடர்பான சோதனை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறைச்சாலை திணைக்களத்துடன் கலந்துரையாடி இது தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் உள்ள சகல சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளிடம் எச் ஐ வி எயிட்ஸ் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment