சிரிய ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் - ஹிலாரி கிளிண்டன்
சிரிய ஜனாதிபதி பசீர் அல்-ஆசாத்துக்கு எதிராக நடைபெறும் கிளர்ச்சி மற்றும் வன்முறைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக அன்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிரியாவில் இடம்பெறும் வன்முறை, மோதல்களுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இவ் வன்முறை, மோதல்களுக்கு அமெரிக்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சிரியாவில் ஜனநாயக ஆட்சி அமைக்க அசாத் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment