குழந்தைகளுக்கான பால்மாவின் விலைகள் குறைகிறது
குழந்தைகளுக்கான பால்மாவின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாககூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெணான்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, 19 வகையான குழந்தைகளுக்கான பால்மாவின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிணங்க இன்றைய தினத்தில் (19.06.2012) இருந்து தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான பால்மாக்களின் விலைகள் மாத்திரம் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment