15 வது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு. ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் 15வது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரை கண்டுகளிப்பதற்காக. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிற்பகல் வருகை தந்திருந்தார்.
போட்டித் தொடரில் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிவந்தி ரட்னாயக, துலாஜ் மதுசங்க ஆகியோருக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச மட்டத்தில் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இவ்வாறான வெற்றி, 18 ஆண்டுகளுக்கு பின்னரே கிடைக்கப்பெற்றுள்ளது. துலாஜ் மதுசங்க, பஸ்யால மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலுகிறார். சிவந்தி ரட்னாயக, கேகாலை புனித ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலுகிறார். கலென்பிந்துனுவௌ மத்திய கல்லூரியின் நிவேசா சிறிவர்தன, உயரம் பாய்தல் போட்டியில், வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
நேற்று விராஜ் ரந்தெனிய 110 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப்போட்டியில், வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 34 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 850 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர் மஹிந்த மஹிந்தானந்த அளுத்கமகேயும், இந்நிகழ்வில் இணைந்திருந்தார்.
No comments:
Post a Comment