கற்பழிப்பு புகார்: தடகள வீராங்கனை கைது
கடந்த வாரம் தடகள வீராங்கனை பிங்கி பிராம்னிக் மீது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கூறியிருந்தார். அப்புகாரில் பிங்கி பெண்ணல்ல. அவர் ஒரு ஆண். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்து விட்டார் என கூறியிருந்தார்.
இதனையடுத்து அரசு மருத்துவமனையில் பிங்கிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவு இன்று கிடைக்கப்பெற்றது. அதில் பிங்கிக்கு நடத்திய பரிசோதனையில் அவர் பெண்தான் என்பதற்கான உடற்கூறுகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பிங்கி பிராம்னிக் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்.
கத்தார் நாட்டில் உள்ள தோஹாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர் பிங்கி பிராமானிக்.
அதே ஆண்டில் மெல்போர்னில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன் பிங்கி விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment