Monday, June 25, 2012

கடந்த க.பொ.த. உயர்தர பரீட்சையின் இசெட் புள்ளிகளை இரத்து செய்க- உயர் நீதிமன்றம்

கடந்த கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையின் போது விநியோகிக்கப்பட்ட இசெட் புள்ளிகளை இரத்து செய்து பழைய மற்றும் புதிய பாடவிதானங் களுக்கு அமைய, மீண்டும் மதீப்பீடுகளை மேற்கொண்டு தாமதமின்றி அதனை வெளியிடுமாறு உயர் நீதிமன்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினாலும், மாணவர்கள் சிலரினாலும், சமர்ப்பிக்கப்பட்ட மனு மீதான தீர்ப்பினை வழங்கிய பிரதம நீதியரசர் ஷராணி பண்டாரநாயக்க தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

இசெட் புள்ளி வழங்குகையில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களில் தோற்றிய மாணவ மாணவிகளுக்கு ஒரே முறையில் புள்ளிகளை வழங்குவதன் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் குறித்த உத்தரவினை பிறப்பித்ததுடன், கடந்த உயர்தர பரீட்சையின் முழுமையான பெறுபேறுகளும் இதன் பிரகாரம் இரத்து செய்யப்பட மாட்டாதென நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com