கடந்த 25ம் திகதி நோர்வேக்கான இலங்கைத் தூதரகத்தில் இடம்பெற்ற எல்ரிரிஈ யினரின் அட்டூழியங்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களை விடுவித்தல் பற்றிய கண்காட்சிக்கு நோர்வே வாழ் தழிழ் மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர் என்று நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா கூறியுள்ளார். சிலர் அதிருப்தியுற்றவர்களாகக் காணப்பட்டாலும் பெரும் பாலோர் இக்கண்காட்சி நடை பெற மிகுந்த ஒத்துழைப்ப்பு வங்கியதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கண்காட்சியின் போது அவர்கள் வடை, கடலை, மரவள்ளி போன்றவை வழங்கியும் மகிழ்ச்சியுற்றதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 25 ம் திகதி தூதுவராலய வளாகத்தில் நடைபெற்ற இக் கண்காட்சி, நோர்வே மக்களுக்காகவும், இராஜதந்திரிகளுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 'அலுவலர்களும் சான்றோரும் – இலங்கை இராணுவ வீரர்கள்' என்ற ஆவணப்படமும் காட்டப்பட்டது. ஐலன்ட் பத்தி எழுத்தாளர் சி. ஏ. சந்திரப்ரேமா எழுதிய 'கோட்டாவின் போர்' என்ற நூலும் இந் நிகழ்ச்சியின் போது நிறைய விற்பனையாகியது.
No comments:
Post a Comment