நாளை சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு, இடம்பெறும் -இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்
சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு, நாளை பிற்பகல் 03.00 மணிக்கு நாட்டின் கரையோர பகுதிகளை அண்டிய 14 மாவட்டங்களில், இடம்பெறுமென இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளா பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால், நாட்டின் 14 மாவட்டங்கள், சுனாமி அச்சுறுத்தல் நிலவுகின்ற மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், இந்த 14 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில், சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு, நாளை பிற்பகல் வேளையில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேச மக்களின் சுனாமி எச்சரிக்கை தொடர்பாக செலுத்தப்படும் அவதானம் குறித்தும், அவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில பிரதேசங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒலியெழுப்பும் கோபுரங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஒத்திகையின் மூலம் எவரும் பதற்றமடைய தேவையில்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் சுனாமி தொடர்பாக தமக்குள்ள நிலைப்பாட்டை இந்த ஒத்திகையின் மூலம் தெரியப்படுத்த முடியுமெனவும், இந்த தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை வேலைத்திட்டம், இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதுடன், இந்த வேலைத்திட்டத்தின் பயனை கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற சுனாமி அச்சுறுத்தலின்போது மக்கள் பெற்றுக்கொண்டதுடன், இதன்மூலம் மக்கள் சிறந்த தெளிவை பெற்றிருந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
சுனாமி தொடர்பாக மக்களின் தெளிவான அறிவை, இவ்வாறான வேலைத்திட்டங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும். வீணான அச்சங்களிலிருந்தும், பதற்றங்களிலிருந்தும் தவிர்ந்து கொள்வதற்கு, இதன்மூலம் மக்களுக்கு முடிந்துள்ளது. இவ்வேலைத்திட்டத்திற்கு, மக்கள் பூரண ஒத்துழைப்பை, இடர் முகாமைத்து மத்திய நிலையத்திற்கு வழங்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment