சாரதிகளின் தவறுகளுக்கான தண்டனைப் புள்ளி வழங்கும் செயற்றிட்டம் ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பம்
இலங்கையில் சாரதிகளின் தவறுகளுக்கான தண்டனைப் புள்ளி வழங்கும் செயற்றிட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகுமென போக்குவரத்து அமைச்சர் கூறுகிறார்
சாரதி ஒருவர் 24 மாத காலத்தினுள் வாகனம் செலுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கென 24 குற்றப் புள்ளிகளை பெற்றுக் கொண்டால் அவரது சாரதி அனுமதி பத்திரம் ஒருவருட காலத்திற்கு இரத்துச் செய்யப்படும் என அமைச்சர் குமார வெல்கம தெரிவிக்கிறார்.
இந்த புள்ளிகளின் அளவு 18 முதல் 23 ற்குள் அமைந்திருந்தால் அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்ய இருப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை விடுப்பார்.
சாரதி பயிற்சி அனுமதி பத்திரத்தை பெற்றுள்ள ஒருவர் 24 மாதத்தினுள் குற்றப் புள்ளிகள் 12யை பெற்றால் அவரின் அனுமதி பத்திரமும் ஒரு வருட காத்திற்கு இரத்துச் செய்யப்படும்.
இருந்த போதிலும் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டிருக்கும் காலத்தினுள் பயிற்சி திட்டங்களில் கலந்து கொண்டு சலுகைகளை பெற முடியும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவிக்கிறார்.
0 comments :
Post a Comment