ஆசிரியையின் தங்க நகை பறிப்பு: நிகவெரடியவில் சம்பவம்
நிகவெரடிய பண்டாரநாயக மாவத்த வீதியில் பாடசாலை ஆசிரியையின் கழுத்தில் இருந்த தங்க மாலையை பறித்துச் சென்ற இரு சந்தேக நபர்களை கைக்குண்டு மற்றும் சொகுசு மோட்டார் சைக்கிலுடன் மாஹோ பலல்ல பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளதாக நிகவெரடிய பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை ஆசிரியை தனது பிள்ளையுடன் பாடசாலை விட்டு வீடு செல்லும் போது மோட்டார் சைக்கிலில் வருகை தந்த சந்தேக நபர், வீடு செல்லும் பாதையை விசாரிப்பது போன்று இரண்டு பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
நிகவெரடிய பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சந்தேக நபர்கள் இது போன்று பல சம்வங்களில் ஈடுபட்டுள்ளாதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
செய்தி- இக்பால் அலி
0 comments :
Post a Comment