பாரத லஷ்மன் பிரேமசந்திரன் உட்பட நால்வரின் கொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பாரத லஷ்மன் பிரேமசந்திரன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 18 சந்தேக நபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சம்பவம் தொடர்பிலான சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் துமிந்த சில்வா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு பாரத லஷ்மன் பிரேமசந்திரவின் தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி காலஅவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரியதையடுத்தே
எதிர்வரும் 10ஆம் திகதி விசாரணைகள் மீண்டும் இடம்பெறவுள்ளன.
No comments:
Post a Comment