வவுனியா சிறையில் உள்ள புலிகள் சட்டத்துக்கு சவால் விடுக்க இடம் தரலாமா? –பாதுகாப்பு அதிகாரி.
அலெக்சாண்டர் தயாபரன், அப்பாதுரை கணேசன் மற்றும் நடராஜா சரவணபவன் என்ற புலி ஆதரவாளர்களை, பயங்கரவாத தடுப்பு பிரிவு நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணைக்கு கொண்டு சென்றமை தொடர்பாக, வவுனியா சிறையில் உள்ள புலிப் பயங்கரவாதிகளால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 321 புலிச் சந்தேக நபர்கள் இருக்கிறார்கள். சிறைச்சாலை ஊழியர்களோ மிகச் சொற்பமானவர்கள்.
இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இங்குள்ள பிரச்சினை என்ன வென்றால் நாட்டின் சட்டத்தை புலிகள் தமது கைகளில் எடுத்துக் கொள்ளளாமா என்பதுதான்? இதற்கு முன்பு சிறைச்சாலையில் கைத்தொலைபேசிகளை கண்டுபிடித்து எடுத்துள்ளோம். இவை NGO க்களால் இவர்களுக்கு வழங்கப்பட்டவையே. படையினரும், பொலிசாரும் சிறைக் கைதிகளைத் தாக்குகின்றார்கள் என்று செய்தி பரப்புவதற்கே NGO க்கள் மற்றும் சில மனிதவுரிமை அமைப்புக்கள் இவ்வாறான வேலைகளை செய்கின்றன. அத்துடன் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதற்கு வவுனியாலில் பிபிசி நிருபர் காத்துக் கொண்டிருக்கின்றார்.
வில்பத்து காட்டில் நிலக்கண்ணிகளைப் புதைத்து வைத்திருப்பதாக அறிந்து, அது பற்றி புலிப் பயங்கரவாதி ஒருவர் விசாரணை செய்வதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துவருமாறு போராட்டம் நடாத்துகிறார்கள். இந்த நாட்டு சட்டத்துக்கு தாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்லர் என்று அவர்கள் இன்னும் நினைக்கிறார்கள்.
அத்துடன், கொழும்பு தமிழ் அரசியல்வாதிகள் இவர்களை கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்குமாறு அரசைக் கோரியதனாலேயே வவுனியாவுக்கு இவர்கள் கொண்டுவரப்பட்டார்கள். நாட்டு மக்களின் மனித உரிமையை பறித்த புலிகள் இன்று பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைணகு எதிரப்பு தெரிகின்றார்கள் என தெரிவித்தார்.
கடந்த 26 ம் திகதி திருமுறிகண்டியில் படையினருக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு அரசியல் வாதிகள் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் 27 ம் திகதி வவுனியாவில் புலிகளின் கிளர்ச்சி இடம் பெற்றுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு வரும் சமயத்தில் இவ்வாறு நடப்பது திட்டமிடப்பட்ட செயல்கள் தானே?
இது வவுனியா சிறையில் நடந்த முதல் சம்பவமல்ல. இதற்குமுன்னர் சசி எனப்படும் பயங்கரவாதி சிறைச்சாலை அதிகாரி ஒருவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டிருந்தார்.NGO காரர்கள் என்ன கூறினாலும், வவுனியா சிறையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் முதல் தர புலிப் பயங்கரவாதிகள்தான்.
முன்னாள் புலிகள் சகஜ வாழ்வுக்கு திரும்புகின்றார்கள் என்று சொல்வதிலும், சமாதான நண்பர்கள் என்று மஞ்சள் பெனியனில் அச்சிட்டுப் போட்டுக் கொண்டு காலிமுகத்திடலிலும் கதிர்காமத்திலும் காட்டுவதில் பயனில்லை.
வவுனியாவில் இவ்வாறு இடம்பெறுவது போன்று நாட்டின் பிற பகுதிகளிலும் பரவலாம். உலகில் சிறைச்சாலைகள் பலவற்றில் ஏற்பட்ட கிளர்ச்சிகள் தண்டனைகளுக்கு இதராகவே. ஆனால், இங்கு பயங்கரவாத தடுப்பு விசாரணைக்கு எதிராக கிளர்ச்சி இடம்பெறுகின்றது.
2002 ல் புலிப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கைவிடச் செய்வதற்கு முயற்சி செய்தார்கள். 2012 ல் அதே முயற்சியைத்தான் மேற்கொள்கின்றார்களா? இதற்கு புலிகளுக்கு இடமளிக்கலாமா? இன்று புலிகள் வவுனியா சிறைச்சாலையை நிர்வகிக்கிறார்கள். அவர்களிடம் செய்மதி வசதிகூட இருக்கின்றது. பாதுகாப்பு இல்லை. சிறைச்சாலைக்கு அடுத்து இருப்பது வீடுகளின் கூரைகள். இதன் மூலம் அவர்கள் தப்பித்து ஒடிவிடலாம். இவ்வாறு பாதுகாப்புத் தகவல்கள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment