குளியாப்பிட்டியவில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க மத்திய குழு உறுப்பினர் டாக்டர் நவீன் டி சொயிசா தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த சட்ட வைத்திய அதிகாரி மீது இனந்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியே இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக டாக்டர் நவீன் டி சொயிசா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment