Friday, June 29, 2012

ஒபாமா நிர்வாகம் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்றது – முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி

உலகின் மனிதவுரிமை என்ற தனது வாக்கியானத்தை அமெரிக்கா கைவிடுகின்றது என்று அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் நியூயோர்க் டைம் சில் தெரிவித்துள்ளார். பயங்கரவதிகளென்று சந்தேகப்படு பவர்களை அழிப்பதை அனுமதித்ததன் மூலம் ஒபாமா நிர்வாகம் மனித உரிமைகளின் 30 பிரிவுகளில் 10 ஐ அப்பட்டமாக மீறியிருக்கின்றது என்ற கார்ட்டர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்கா பன்னாட்டு மனித உரிமைகளை மீறுவதன் மூலம் எதிரிகளைத் தூண்டிவிடுகின்றது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நியூ அமெரிக்கா பவுண்டேசன் மதிப்பீட்டின் படி ஜனவரி 2009 குப் பின் பாகிஸ்தானில் மாத்திரம் 265 விமானத்தாக்குதல் நடை பெற்றுள்ளதாகவும், குறைந்தது 1488 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கிளில் 1343 பேர் போராளிகள் என்றும் தெரிவிக்கின்றது.

இது குறித்து தொடரும் கார்ட்டர் குவாண்டனாவோ (கியுபாவில் அமெரிக்கச் சிறை) தடுப்பு முகாமில் அமெரிக்கா செய்யும் படுபாதகச் செயல்கள் பற்றி விபரித்துள்ளார். காலவரையற்ற முறையில் பயங்கரவாத சந்தேக நபர்களைத் தடுத்து வைக்க அதிகாரம் கொடுக்கும் அணமைய சட்டவாக்கம் பற்றியும் அவர் கண்டித்துள்ளார்.

கார்ட்டர் தனது எழுத்தில் ஒபாமாவின் பெயர் குறப்பிடவில்லை. ஆனால் நமது அரசாங்கம், வாசிங்டனில் உள்ள அதிவுயர் அதிகாரபீடம் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment