ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுவிழா சனியன்று ஆரம்பம்
இலங்கையில் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீர வீராங்கனைகளில் சிலர் ஏற்கனவே இலங்கை வந்துள்ளனர்.
28 வீரர்களைக் கொண்ட சவூதி அரேபிய அணி இன்று இலங்கை வந்தடைந்தது. குவைத், யெமன் மெய்வல்லுநர் அணிகளும் ஏற்கனவே இலங்கை வந்துள்ளன.
விளையாட்டு விழாவை உயர்ந்த தரத்துடன் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 9ம் திகதி சனிக்கிழமை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்; ஆரம்பமாகும் இந்த விழாவில், சுமார் 850 வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் 12ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும்.
0 comments :
Post a Comment