பொது எதிர்கட்சியே தமது இலக்கு என்கிறார் பொன்சேகா
பொது எதிர்கட்சி ஒன்றை உருவாக்குவதே தமது ஒரே இலக்கு என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்கட்சியில் தலைமை த்துவத்துக்கான போட்டிகளும், ஏனைய தனிப்பட்ட பிரச்சினைகளும் காணப்படும் வரையில், அரசாங்கம் அதில் இருந்து நன்மையை பெற்றுக் கொள்ளும்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பதவி மற்றும் தனிப்பட்ட சிக்கல்களை புறம்தள்ளிவிட்டு, பொது எதிர்கட்சி ஒன்றுக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு தமக்கு இருக்கிறது எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு பதவியோ, அதிகாரமே தேவையில்லை எனவும், அவ்வாறான அதிகாரங்கள் தமக்கு இருந்த போதும், அதனை உதைத்து தள்ளிவிட்டே மக்கள் முன்னர் வந்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment