இலஞ்சம், ஊழல், மோசடி, வருமாவரி ஏய்ப்பு போன்றவை தொடர்பாக 75 க்கு மேற்பட்ட அரசியல் வாதிகள் சிக்கியிருப்பதாகவும் இவர்களில் 08 அமைச்சர்கள் 05 பிரதியமைச்சர்கள் உட்பட பலர் அடங்குவர் எனவும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான விசாரணை ஆணையம் கூறுகின்றது. பிற கட்சிகளைச் சேர்ந்த 10 பா.உ.க்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் 12 பேர், நகராதிபதிகள், பிரதேச சபைத் தலைவர்கள் உட்பட 40க்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இந்த பட்டியலில் அடங்குவதாகவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment