எகிப்தின் புதிய ஜனாதிபதியாக கலாநிதி மொஹமட் முர்சி தெரிவு
எகிப்தின் புதிய ஜனாதிபதியாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலாநிதி மொஹமட் முர்சி தெரிவு செய்யப்படடுள்ளார்.
இதனையடுத்து மக்கள் எகிப்திய வீதிகளில் மகிழ்ச்சி ஆர்வாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எகிப்தின் பல்வேறு பிரதேசங்களில் மக்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர் 13.5 மில்லியன் வாக்குகளை பெற்றார். 26 மில்லியன் மக்களை கொண்ட எகிப்தில் நூற்றுக்கு 51 வீத வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்த அம்சமாகும்.
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. புகழ்மிக்க வரலாற்றை கொண்ட எகிப்தின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை தான் பொறுப்பேற்பதாக மக்கள் மத்தியில் உரையாற்றிய மொஹமட் முர்சி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment