அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகொன்றில் 112 பேரை கடத்திச் செல்ல முற்பட்ட வேளையில், கடந்த மே 17 ம் திகதி நீர்கொழும்பில் கைதான ஏழு ஆட்கடத்தல் காரர்களையும் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிஙகப்புலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த ஏழு பேரின் கடத்தல் நடவடிக்கை பற்றிய முழு அறிக்கையை வரும் ஜூலை 6ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு நீதவான் கொழும்பு குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சி. ராஜபக்ஷ அவர்கள், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் எந்தவித குடியகல்வு குடிவரவு சட்டத்தையும் மீறவில்லையென்றும், குற்றப்புலனாய்வு பிரிவினர் இவர்களுக்கு எதிராக எந்தவித முறையான சாட்சியத்தையும் முன்வைக்கவில்லை யென்றும், வாதாடிய போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
No comments:
Post a Comment