இலங்கையின் பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்கு நடவடிக்கை.
இலங்கையில் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதுடன், பல்கலைக்கழகத் திலிருந்து வெளியேறும் மாணவர்களை சர்வதேச அங்கீகாரம் பெறக்கூடிய வகையில் உருவாக்குவதற்கும், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு க்களை பெற்றுக் கொள்வதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம், என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க புதிய கற்கை நெறிகளும் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், பழைய பாடவிதானங்கள் நவீனமயப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் களுத்துறை வஸ்கடுவவில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment