அதிகாரங்களை மக்களுக்கு பகிருமாறு ரணில் வற்புறுத்தல்
அரசியலின் ஊடாக பெறப்படுகின்ற அதிகாரத்தை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும், மக்கள் மத்தியில் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க அரசியல் கட்சிக்கோ, தனியொருவருக்கோ முடியாது. அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
அதிகாரங்களை பொதுமக்களிடையே பகிர்ந்தளிக்கும் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், அரசியல் என்பது அதிகாரத்திற்கான ஒரு போட்டி.
எனவே, அதிகாரத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அதனை தம் வசம் வைத்துக்கொள்வதா? அல்லது பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்பதா?
அதிகாரத்தை குறிப்பிட்ட ஒருசிலர் வைத்துக்கொண்டால் என்ன நடக்கும்? அவர் மட்டும்தான் முன்னேறுவார்.பொதுமக்களுக்கு என்ன நடக்கும்?
ஒரு காலத்தில் ஊடகங்களை முகாமைத்துவப்படுத்தி அந்த அதிகாரங்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கு இயலுமாக இருந்தது. தற்போது சமூக வலையமைப்புகளினால் அந்த முறைமை மாற்றப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் மத்தியில் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க அரசியல் கட்சிக்கோ, தனியொருவருக்கோ முடியாது. அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும், அதற்கு இவ்வாறான நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment