Friday, June 22, 2012

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் புரிந்த இரு வெள்ளைக்காரிகளைத் தேடி விசாரணை

காலி உனவட்டுன பிரதேசத்தில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம்செய்ததாக கூறப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்கள் இருவரை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

குறித்த சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று உணவு மற்றும் குளிர்பானத்தை வழங்கி மயக்கமடையச் செய்த பின்னர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காலி பொலிஸார், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் மற்றும் அபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com