Thursday, June 21, 2012

ஜூலை பிற் பகுதியில் துமிந்தவின் வாக்கு மூலம்.

பாரத லக்ஷமன் பிரேமசந்திர படுகொலையின் பிரதான சந்தேக நபரான பாராளமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நல்ல உடல் நிலை தேறி வருவதால் ஜூலை பிற்பகுதியில் அவரிட்ம வாக்கு மூலம் பெற முடியும் என துமிந்த சில்வாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

19 ம் திகதி கொழும்பு மாஜிஸ்ட்றேட் நீதிமன்றத்தில் பதில் மஜிஸ்ட்றேட் மஞ்சுல கருணாரத்ன முன்னிலையில் இடம் பெற்ற விசாரணையில் துமிந்த சில்வாவின் வழக்கறிஞர் ஹேமந்த வர்ணகுலசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார் கூறினார்.

இதேவேளை மேற்படி படுகொலை சந்தேக நபரான துமிந்த சில்வாவைக் கைது செய்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று குற்றப் புலனாய்வு பொலிஸின் உதவிப் பொலிஸ் அதியாரியான ஷானி அபேசுந்தர தெரிவித்துள்ளார் .இந்த வழக்கு ஜூன் 26ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment