யுனெஸ்கோ அரசியல்மயமாகி விட்டது – பிரான்சுக்கான தூதுவர் தயான் ஜெயதிலக்க.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பானது (UNESCO) ஐ.நா முகவராண்மையால் அரசியல் மயமாக்கப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்துவதற்கு பன்னாட்டு ஆதரவை பிரான்சுக்கான இலங்கை தூதுவர் தயான் ஜெயதிலக்க, கோரியுள்ளார்.
இவ்வாறு கோரியுள்ள பாரிசில் உள்ள இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக்க UNESCO வுக்குள்ளேயே சிந்தித் செயல்படுவதை UNESCO தவிர்த்துள்ளதாகவும், UNESCO வின் மூளை படிப்படியாக நறுக்கப்பட்டு வருவதாகவும், இந்த சவாலை எதிர் கொள்வதற்கு உலக சமுதாயம் எதனையுமே செய்யவில்லை என தயான் ஜெயதிலக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தலைமைத்துவ மையங்கள் மற்றும் சிந்தனாவாதங்களின் மென்மையான சக்திமிக்க உதிரிப் பாகமாக UNESCO மாறி வருவதையும், தலைமைத்துவ மையங்களின் சிந்தனைகளைக் காவிச் செல்லும் மற்றும் அவற்றைப் பரப்பும் வெறும் அமைப்பாக மாறி வருவதைப் பன்னாட்டுச் சமூகம் நிறுத்த வேண்டும் என்றும், அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மனிதவுரிமை எண்ணக் கருக்களை திரித்துக் கூறும் இடையீட்டுச் செயற்றிட்டமாகவும், மாறிவிட்டதாகவும் என்றும் UNESCO வுக்குள் G77, சீனா மற்றும் அணிசேரா இயக்கம் ஆகியவற்றுக் கிடையில் நெருங்கிய, கட்டமைப்புடனான ஒத்துழைப்பு ஏற்பட வேண்டுமெனவும் இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment