அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட, பல்வேறு ரகசியங்களை, 'விக்கி லீக்ஸ்' இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசன்ஜே. அது மாத்திமைன்றி, இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாகவும் ஸ்வீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து, அசன்ஜே பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். ஸ்வீடனின் கோரிக்கைப்படி, இவர் கைது செய்யப்பட்டார். பின்பு லண்டன் நீதிமன்றம் இவருக்கு பிணை வழங்கியது.
இதற்கிடையே, தங்கள் நாட்டிடம் இவரை ஒப்படைக்கும்படி ஸ்வீடன் கோரியது. இதை எதிர்த்து அசாஞ்ச் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளில், ஐந்து நீதிபதிகள், அசன்ஜே ஸ்வீடனிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து, அசன்ஜே மேல் முறையீடு செய்தார். ஆனால், இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து, அசன்ஜே கைது செய்து ஸ்வீடனிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்ப்பதற்காக, அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். தூதரகத்தை விட்டு வெளியேறும்பட்சத்தில், அவரை கைது செய்வோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இதுகுறித்து, அசன்ஜே குறிப்பிடுகையில், 'ஸ்வீடனுக்கு என்னை நாடு கடத்தினால், அமெரிக்காவிடம் நான் ஒப்படைக்கப்படுவேன், அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக, எனக்கு அமெரிக்காவில் மரண தண்டனை அளிக்கப்படும் அபாயம் உள்ளது' என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment