கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமை யிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கைலேஸ்வரராஜா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தானும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அரசியல் செயற்பாடுகளை புரிந்து கொள்ள முடியாததால், கட்சிக்குள் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன எனவும் கைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமது கட்சியில் எந்தவித பிளவும் கிடையாது எனவும், தமது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பொய் எனவும் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் லாபம் தேடும்நோக்கில்மேறகொள்ளப்பட்டுள்ள பிரசாரம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment