நயினாதீவில் கரையோர பகுதியில் கிடந்த கைக்குண்டொன்றை கையிலெடுத்து பரீட்சித்து பார்ததில் அக்கைக்குண்டு வெடித்ததில் நயினாதீவு பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவன் ஓருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கு எல்லைப் பிரதேசங்களில் பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்ந்தும் கண்டெடுக்கப்படுவதாகவும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் காணப்படும் மர்மப் பொருட்களை பரீட்சித்துப் பார்ப்பதை தவிர்க்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களினால் தமிழ்பேசும் மக்களின் பிள்ளைகளே பெரிதும் உயிராபத்துக்களை எதிர்நோக்க நேரிடுவதாக தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர், கரையோரங்கள், வீதிகள், பாடசாலை மைதானம், காட்டுப் பகுதிகள் உட்பட வேறுபல இடங்களில் காணப்படுகின்ற இனந்தெரியாத பொருட்களை பிள்ளைகள் பரீட்சித்துப் பார்ப்பதை தடுக்கும் வகையில் பெற்றோர் தமது பிள்ளைகளை தெளிவுபடுத்த வேண்டியது அத்தியாவசியமாகும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment