துறைமுக நுழைவுப்பாதையிலுள்ள 50 மீற்றர் நீழமான பாரிய கற்பாறையை அகற்ற பாரிய அளவிலான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் அதன் எதிர்விளைவாகவே துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் பூமி அதிர்ச்சி உணரப்படுவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார மற்றும் துறைமுக அபிவிருத்தி துறையின் மாபெரும் திட்டமாக கொழும்பு தெற்கு துறைமுகம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 4 கட்டமைப்புக்களுடன் உலகில் மிகப் பெரிய கப்பல்கள் வருகை தரும் வகையில் இத்துறைமுகம் நிர்மாணிக்கப்படுபகின்றது.
இத்துறைமுகத்திற்கு கப்பல்கள் பிரவேசிக்கும் பாதையில் 50 மீட்டர் அகலமான பாரிய பாறையொன்று கண்டுப்;பிடிக்கப்பட்டுள்ளது. அதனை நவீன முறைப்படி வெடிக்க வைப்பதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புவி சரிதவியல் பணியகத்தில் நேரடி மேற்பார்வையில் இப்பாறை வெடிக்க வைக்கப்படுவதுடன், தற்போது துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் அடிக்கடி இடம்பெறும் சிறிய அளவிலான பூமி அதிரிச்சிக்கு இவ்வெடிப்பு சம்பவமே காரணமென புவிச்சரிதவியல் பணியகம் தெரிவித்துள்ளது.
பாறையை வெடிக்க வைக்கும் பணிகள், உரிய தரம் மற்றும் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படுவதுடன், கொழும்பு நகரிலுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள பூகம்பத்தை அளக்கும் மானிகளின் உதவியுடன் அவற்றின் நிலைமை தொடர்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தெற்கு துறைமுகத்தின் உள்ளக அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
...............................
No comments:
Post a Comment