புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் ஐவர் கடந்தவாரம் வவுனியா விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட நால்வர் இரு நாட்களுக்கு முன்னர் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் மீது கொள்ளை , களவு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
இதேநேரம் இவர்களுடன் கைது செய்யப்பட்ட சூரீ என்பவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் வவுனியா நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதாகவும் அறியக்கிடைக்கின்றது.
வடகிழக்கில் கைதுகள் இடம்பெற்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதற்கு எதிராக போர்கொடி தூக்குவது வழக்கம். ஆனால் புளொட் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளபோதும் (இரண்டறக்கலந்துள்ளபோதும்) இக்கைது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அலட்டிக்கொள்ளாததையிட்டு புளொட் விசுவாசிகள் விசனம் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment