Friday, June 1, 2012

பிக்குகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதைத் தடைசெய்ய வேண்டும் – விஜேதாச ராஜபக்‌ஷ

பௌத்த பிக்குகள் உட்பட மத தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க இடமளிக்க கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிப்பதை சட்டரீதியாக தடைசெய்ய வேண்டும் என்பதே மக்களில் பலரின் எதிர்பார்ப்பாகும் எனவும் அரசியலமைப்பில் இந்த திருத்தத்தைச் செய்ய வேண்டும் எனவும் விஜேதாச ராஜபக்‌ஷ யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

பௌத்த பிக்குகள் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதன் மூலம் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. ஏனைய மதங்களை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிக்காததன் மூலம் அவர்கள் தமது கௌரவத்தையும் தமது மரியாதைகளையும் தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.

பௌத்த பிக்குகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படும் போது, அவர்களிடத்தில், அடிப்படைவாத கொள்கைகளை காணமுடிகிறது. இந்த செயற்பாடு பல மதங்களை கொண்ட சமூகத்தில் நன்மைகளை ஏற்படுத்தவில்லை எனவும் விஜேதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.

1 comment:

  1. Archbishop Makarios 111 of Cyprus served the country sincerely as a president for 14 years,so why not our Buddhist monks..?

    ReplyDelete