Saturday, June 23, 2012

ஜனாதிபதியின் ஆலோசகர் ஹேமகுமார நாணயக்கார ராஜினாமா

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விவசாய ஆலோசகர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டில் விவசாய தொழில் துறையைமேம்படுத்துவதில் அரசாங்கம் அக்கறையின்றி செயல்படுவதாக தெரிவித்தே பதவி வலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கண்டி குண்டசாலை விவசாய கல்லூரி, சீதா-எலிய கிழங்கு பயிரிடம் நிலம் ஆகியவற்றில் உள்ளுர் விமான நிலையங்களை அமைப்தற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனால், நாட்டின் விவசாய துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்படவுள்ளது.

இந்நிலையிலேயே, தாம் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு காலி மாவட்டத்திலிருந்து ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான ஹேமகுமார பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அவர் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த அவர், 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. பின்னர் அவர் ஜனாதிபதியின் விவசாயத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment