Wednesday, June 20, 2012

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வருமானம் தேடும் விசேட பயிற்சிகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, தொழில் வசதியின்றி இருக்கும் மக்களுக்கு, மாசி மற்றும் மீன் கருவாடுகளை இலகுவாக பதனிட்டு உற்பத்தி செய்து வருமானம் தேடும் விசேட பயிற்சிகளை வழங்க, கடற்றொழில் நீரியல் வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் நிதி உதவியில், மட்டக்கள்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம், இவ் விசேட பயிற்சியை வழங்க முன்வந்துள்ளது.

இவ்விசேட திட்டத்தின் கீழ், இம்மாவட்டத்தின் கிராண்குளம், தம்பலவத்தை, செட்டிப்பாளயம், திராய்மடு, கண்ணங்குடா பகுதிகளை சேர்ந்த கிராமிய மீனவர்களின் அங்கத்தினர்களுக்கு, இவ்விசேட பயிற்சி வழங்கப்பட்டதுடன், இத்தொழிலை தொடர முன்வந்த மீனவர் கிராமிய அமைப்புகளுக்கு, இலவசமாக உபகரணங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் இப்பயிற்சி நெறி, கட்டம் கட்டமாக, மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள அலுவலகத்தில் மாவட்ட உதவி பணிப்பாளரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட கடற்றொழில் நீரியல் வள அமைச்சின் அதிகாரிகளும், கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com