Friday, June 1, 2012

கூலிக்கு அமர்த்தி விற்னை செய்யப்பட்ட வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டது

40 இலட்சம் ரூபா பெறுமதியான வேனை கூலிக்கு அமர்த்தி வாகன இலக்கத்தை மாற்றி விற்பனை செய்த வாகனத்தை கைப்பற்றியுள்ளதாக குருநாகல் குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து பொலிஸர் மேற்கொண்ட விசாரணையின் மூலம் வேனின் உரிமையாளர் குருநாகலைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

குருநாகல் வியாபாரியின் வேனை கூலி என்ற அடிப்படையில் பெற்ற கல்பிடியைச் சேர்ந்த நபர், அந்த வாகனத்தை அலவத்துக்கொட வதிவிடமாகக் கொண்ட நபர் ஒருவருக்கு கூலி என்ற அடிப்படையில் வழங்கியுள்ளார். அந்த நபர் வெல்லம்பிடிய வதிவிடமாகக் கொண்டவருக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து 20 இலட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

மோசடி ரீதியாக வாகனங்களை மாற்றியமைத்து விற்பனை செய்பவர் எனக் கூறப்படும் வெல்லம்பிடிய வதிவிடயமாகக் கொண்டவர், அந்த வாகனத்தை போலி செசி இன்ஜின் இலக்கத்தை வெட்டி போலியான ஆவணங்களுடன் வாகனத்தை இப்போது பாவனை செய்வதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இந்த தகவலின்படி சந்தேக நபர்களை பின் தொடர்ந்து சென்று கெகிராவை பிரதேசத்தில் வைத்து வேனைக் கண்டு பிடிக்க முடிந்த்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தம் மனைவியின் இல்லத்திற்கு சென்றிருந்த போது வேனை கைப்பற்றக் கிடைத்ததாகவும், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com