விரைவில் நடைபெறலாம் என்று சொல்லப்படும் வடமத்திய, சபரகமுவை மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு எந்தவொரு கூட்டணியும் இன்றி தனியாக முகங்கொடுப்பது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என சரத் பொன்சேகாவுக்கு அவரது அரசியல் கட்சியினர் ஆலோசனை கூறியிருப்பதாகத் தெரிய வருகின்றது.
எவ்வாறாயினும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதா இல்லையா என்று இதுவரை முடிவெடுக்க வில்லையென்றும், போட்டியிடாவிட்டால் அரசில் களத்திலிருந்து ஒதுக்கப்படும் நிலையும் ஏற்படலாம் என்று கட்சியினர் அஞ்சுவதாகவும் தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment