கிழக்கு மாகாண சனத்தொகையில் 41% தமிழ் மக்கள், 38% முஸ்லிம் மக்கள், ஏனையோர் சிங்களவர். இதில் முஸ்லிம்ளை விட தமிழர்கள் அதிகமாக இருந்தாலும், முஸ்லிம்களின் வாக்களிப்பு முறை காரணமாக அவர்கள் தேர்தலில் தமிழரை விட கூடிய ஆசனங்களைப் பெற்று விடுகின்றனர். அவர்கள் மத்தியில் பல சிறு சிறு கட்சிகள் இருந்தாலும் வாக்களிப்பின் போது கவனமாக செயற்படுவதன் மூலமே இவ்வாறு ஆசனங்களைப் பெறுகின்றனர்.
ஆனால் தமிழர் அவ்வாறில்லை. மாகாண சபையைக் கலைப்பதற்கு நான் ஒப்புதல் அளித்தேன். என்னிடமிருந்த அந்த 7 ஆசனங்களையும் மீண்டும் பெற்று வெற்றி பெறுவேன். கடந்த ஆண்டுகளில் நாங்கள் செய்த சேவைகளை மக்கள் மறக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இந்திய உட்பட வெளிநாடுகளின் உதவிகள் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று, நான் மாகாணத்தை வளப்படுத்தியுள்ளேன், அதனால் மனத்திருப்தியோடு பதவி விலகுகின்றேன், என கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொது மக்கள் ஐக்கிய முன்னணி பெரும் வெறிவாகை சூடும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண பிரதம அமைப்பாளரான அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். தான் பல்கலைக் கழக மாணவர்களைக் கொண்டு நடாத்திய ஆய்வின் மூலம் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 76,000 பேர் வெளிநாட்டில் இருப்பதாக அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் இருக்கும் தமிழரை விட இங்கிருக்கும் தமிழர் மிகக் குறைவு. இதனால், முஸ்லிம் முதலமைச்சர் வரக்கூடுடிய வாய்யப்பு உண்டு என்று அவர் கூறுகின்றார்.
No comments:
Post a Comment