Thursday, June 14, 2012

கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு உதவ படையினர் திட்டங்களை வகுத்துள்ளனர்- கட்டளை தளபதி

கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு, அம்மாகாண விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வதற்கும், அம்மாகாண விவசா யிகளுக்கு நிவாரணங்களை வழங்கவும், படையினர் திட்டங்களை வகுத்து ள்ளதாக, கிழக்கு மாகாண உதவி முன்னிலை கட்டளை தளபதி பிரிகேடியர் ரவி மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்கமைய, இலங்கை இராணுவம் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதால், தெஹியத்தகண்டிய உள்ளிட்ட பிரதேச விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளதுடன், அரசு நிர்ணயித்த விலையில் நெல் கொள்வனவு மற்றும் நெல் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்தார்.

அத்துடன்,1972 ஆம் ஆண்டு எல்.ரி.ரி.ஈ அச்சுறுத்தலினால் மூடப்பட்ட இங்கினியாகல அரிசி ஆலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தெஹியத்தகண்டியவில் அமைந்துள்ள மகாவெலி நெல் ஆலையில் இருந்து நாளொன்றுக்கு 9 ஆயிரம் கிலோ அரிசியை இராணுவத்தினர் கொள்வனவு செய்கின்றனர் எனவும், விவசாயிகளை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதல் தடவையாக இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு, இராணுவம் பங்களிப்பு செய்வது தொடர்பாக, விவசாயிகள் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com